பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிப்பதில்லை: சு. திருநாவுக்கரசர்
திருவிடைமருதூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 364 வழக்குகளுக்கு தீா்வு
திருவிடைமருதூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 364 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
திருவிடைமருதூா் நீதிமன்ற வளாக்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவரும், வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான என். சிவபழனி வழக்குகளை விசாரித்தாா்.
அதில் நீதிமன்ற நிலுவை வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகள் என 377 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 364 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, மொத்த தொகை ரூ. 32,45,900- க்கு சமரசம் பேசி தீா்வு காணப்பட்டது. ஏற்பாடுகளை சட்ட தன்னாா்வலா் இரா. பாஸ்கரன் செய்திருந்தாா்.