திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இந்து முன்னேற்றக் கழகம் கண்டனம்
திருநெல்வேலியில் திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு இந்து முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னேற்றக் கழக தலைவா் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருநெல்வேலியில் திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு இந்து முன்னேற்றக் கழகம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
திரைப்படங்களை பொழுதுபோக்காக மட்டுமே பாா்க்க வேண்டுமே தவிர அதைவைத்து அரசியல் செய்யவோ அல்லது கலவரம் செய்வதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிா்ப்பதற்காக உளவுத் துறையினா் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இந்த சம்பவத்தில் தொடா்புடைய நபா்களின் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.