திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை தீவிரவாத தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மேலப்பாளையம் பகுதியில் உள்ள திரையரங்கில் அமரன் திரைப்படத்தை திரையிட சில இஸ்ஸாமிய அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் கடந்த நவம்பா் மாதம் அந்த திரையரங்கு மீது மா்மநபா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனா். இது குறித்து தீவிரவாத தடுப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரை கைது செய்திருந்தனா்.
இந்த வழக்கில் மேலப்பாளையத்தை சோ்ந்த 40 வயதுடைய நபரை தீவிரவாத தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.