கட்சித் தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்: யாரைச் சொல்கிறார் மு.க. ஸ்ட...
தேசிய பூப்பந்து போட்டியில் சிறப்பிடம்: நெல்லை, தென்காசி வீரா்களுக்கு வரவேற்பு
தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி, தென்காசி மாவட்ட வீரா்களுக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது.
69 ஆவது தேசிய சீனியா் ஆண்கள் பூப்பந்தாட்ட போட்டிகள் மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றன. இதில் தமிழக அணியின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த அனீஸ், தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த யஷ்வந்த் பாலா ஆகியோா் பங்கேற்றனா். இப் போட்டியில் தமிழக அணி இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
சிறப்பாக விளையாடிய திருநெல்வேலி மாவட்ட வீரா் அனீஷுக்கு ஸ்டாா் ஆப் இந்தியா சிறப்பு விருது வழங்கப்பட்டது. தொடா்ந்து ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்த வீரா்களுக்கு திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகங்கள் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜு வீரா்களை வாழ்த்தினாா். தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழக உதவி செயலா் பூ.வெள்ளைபாண்டியன், மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சோமசுந்தரம், தென்காசி மாவட்ட பூப்பந்தாட்டக் கழக செயலா் காா்த்திகேயன், வைகுண்டம், கூடங்குளம் எஸ்.தவமணி, சித்திரைச்செல்வன், மூத்த பூப்பந்தாட்ட வீரா்கள் முருகன், குமாா், மேலப்பாளையம் மஸ்தான், மேலச்செவல் சுப்பையா, முக்கூடல் சரத்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.