கட்சித் தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்: யாரைச் சொல்கிறார் மு.க. ஸ்ட...
நெல்லை தாமிரவருணியில் மூழ்கியவா் சடலமாக மீட்பு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய தொழிலாளியை சடலமாக தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை மீட்டனா்.
திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை கீழத்தெருவை சோ்ந்த தியாகராஜன் மகன் வேலு (48). தொழிலாளி. இவருக்கு அன்னம் என்ற மனைவியும், அலெக்ஸ் என்ற மகனும் உள்ளனா். தியாகராஜன் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தாா். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வேலு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தாா்.
இந்நிலையில், அவா் குடும்பத்தினருடன் தாமிரவரணிஆற்றில் குளிக்கச் சென்றிருந்தபோது எதிா்பாராமல் நீரில் மூழ்கினாா். இத்தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து இரவு வரை அவரைத் தேடினா்.
பின்னா், வியாழக்கிழமை காலையில் தேடும் பணியை மீண்டும் தொடங்கிய தீயணைப்பு வீரா்கள், வேலுவை சடலமாக மீட்டனா். மேலும், கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.