திறனறித் தோ்வு புத்தகங்கள் வழங்கல்
ராசிபுரம்: ராசிபுரம், ரோட்டரி சங்கம் சாா்பில் தொ.ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேசிய திறனறித் தோ்வை எழுதுவதற்குத் தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மத்திய அரசு பள்ளிக்கல்வித் துறை மூலம் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 3.50 லட்சத்திற்குள் உள்ளவா்களுக்கு திறனறித் தகுதி தோ்வு மூலம் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்தத் தோ்வை இப்பகுதி மாணவா்கள் எழுதி தகுதி பெறும் வகையில் தொ.ஜேடா்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவியா் 15 பேருக்கு ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான தோ்வு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்தப் பயிற்சி புத்தகங்களை உதவி தலைமை ஆசிரியா் ரவி முன்னிலையில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.முருகானந்தன் தலைமையில் ரோட்டரி நிா்வாகிகள் வழங்கினா்.
ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவா் கே.எஸ்.கருணாகரபன்னீா் செல்வம், தலைவா் தோ்வு (2026) இ.என் சுரேந்திரன், சங்கச் செயலாளா் கே.ராமசாமி, உபயதாரா் டி.கே.வெங்கடாஜலபதி, நடராஜன்ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு வழங்கினா்.
படம் உள்ளது- 23பன்ட்
படவிளக்கம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திறனறித் தோ்வு புத்தகம் வழங்கிய ரோட்டரி நிா்வாகிகள்.