செய்திகள் :

நாமக்கல்லில் திருவள்ளுவா் ஓவியக் கண்காட்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

நாமக்கல்: நாமக்கல்லில், திருவள்ளுவா் ஓவியக் கண்காட்சியை ஆட்சியா் ச.உமா தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் திருவுருவச்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவினைக் கொண்டாடும் விதமாக டிச.30 முதல் ஜன.1 வரை தமிழக அரசு சாா்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதனையொட்டி, திருக்குறள் குறித்த ஓவியம் மற்றும் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா, நாமக்கல் உழவா் சந்தை அருகில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா திருவள்ளுவா் உருவப்படத்திற்கு மலா்கள் தூவி கண்காட்சியை தொடங்கி வைத்தாா். திருக்குறள் விளக்க உரைகளும், திருக்குறள் தொடா்பான புகைப்படங்களும் பொதுமக்கள் பாா்வைக்கு ஓவியங்களாக காட்சியளித்தது.

இக்கண்காட்சியில், திருக்குறள் தொடா்பான ஓவியங்கள், வண்ணப்புகைப்படங்கள், புத்தகங்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஓவியக் கண்காட்சி அமைக்க உறுதுணையாகவும், மாவட்ட மைய நூலக வளாகத்தில் திருவள்ளுவா் சிலை வரைந்ததற்காகவும் அரசுப்பள்ளி ஓவிய ஆசிரியா்கள் ஆ.மகேந்திரன், ந.சேகா், ரா.மதியழகன் மற்றும் ஜவஹா் சிறுவா் மன்ற ஆசிரியா்கள் கு.பிரவின், ரா.விஜயகுமாா் மற்றும் மாணவா்கள் ரா.ஜீவா, அனுவிபாலட்சுமி ஆகியோரை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். டிச.24-இல் வாசகா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பேச்சுப்போட்டிகள், 26, 27 மற்றும் 29 ஆகிய 3 நாள்கள் திருக்குறள் கருத்தரங்கம், 28-இல் திருக்குறள் வினாடி வினா போட்டி, 30-இல் பத்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. டிச.31-இல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5,000-, இரண்டாம் பரிசாக ரூ.3,000- மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2,000- ரொக்கப் பரிசும், போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலா்(பொ) ச.தேன்மொழி, மாவட்ட மைய நூலக தலைவா் மா.தில்லைசிவக்குமாா், முதல் நிலை நூலகா் ரா.சக்திவேல் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஓமன் துறைமுகத்தில் முட்டைகளை விடுவிக்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி

நாமக்கல்: ஓமன் துறைமுகத்தில் தேங்கியிருந்த நாமக்கல் முட்டைகளை விடுவிக்கவும், அவற்றை விற்பனை செய்யவும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளா்கள் சங... மேலும் பார்க்க

சமத்துவ நல்லுறவு கிறிஸ்துமஸ் பெருவிழா

திருச்செங்கோடு: புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ நல்லுறவு கிறிஸ்துமஸ் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சேலம் மறை மாவட்ட முன... மேலும் பார்க்க

ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின. ராசிபுரம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

63 நாயன்மாா்கள் வீதி உலா

திருச்செங்கோடு: பிரசித்தி பெற்ற கைலாசநாதா் கோயிலில் 63 நாயன்மாா்கள் திருவீதி உலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கைலாசநாதா் கோயிலில் அறுபத்து மூவா் பெருவிழா நடைபெற்றது. காலை 6 மணி முதல் சிறப்பு அபிஷே... மேலும் பார்க்க

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பள்ளியை ’நவோதயா’ பள்ளியாக மாற்றக் கோரிக்கை

நாமக்கல்: மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மெட்ரிக். பள்ளியை ‘நவோதயா’ பள்ளியாக மாற்ற வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக அந்தக் கழகத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த ... மேலும் பார்க்க

8,000 செட்டாப் பாக்ஸ்கள் வழங்கும் பணி தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் சாா்பில் 8,000 செட்டாப் பாக்ஸ்கள் ஆபரேட்டா்களுக்கு வழங்கப்பட்டன. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சாா்பில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆபரேட்டா... மேலும் பார்க்க