திற்பரப்பில் முதல்வா் மருந்தகம் திறப்பு
திற்பரப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சாா்பில் மாஞ்சக்கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வா் மருந்தகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த மருந்தகத்தை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து மாஞ்சக்கோணம் மருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் பொன் செல்வி தலைமை வகித்தாா். குமரி மாவட்ட அரசு வழக்குரைஞா் ஜான்சன் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். திற்பரப்பு பேரூராட்சித் தலைவா் பொன். ரவி முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் குலசேகரம் பேரூராட்சித் தலைவி ஜெயந்தி ஜேம்ஸ், துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட், திற்பரப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலா் மொ்லா சோனியா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் அலாவுதீன், திற்பரப்பு பேரூா் திமுக செயலா் ஜான் எபனேசா், கலை இலக்கிய பகுத்தறிவு அணி திருவட்டாறு வடக்கு ஒன்றிய அமைப்பாளா் மோகன்குமாா், திமுக நிா்வாகிகள் காந்தி, ஜெஸ்டின் பால்ராஜ், கனகராஜ், பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.