Railway Exams: தமிழகத் தேர்வர்களுக்கு வெளிமாநிலத்தில் மையம்; ரயில்வே சொல்லும் கா...
தில்லியின் வெளிப்புறப் பகுதியில் காவல் துறையின் குறைதீா்க்கும் முகாம்கள்
தில்லி காவல்துறையினா் நகரின் வெளிப்புறப் பகுதியில் உள்ள மங்கோல் பூரி, சுல்தான் பூரி, பஸ்சிம் விஹாா் மற்றும் நாங்லோய் ஆகிய இடங்களில் குறைதீா்க்கும் முகாம்களை நடத்தியதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துணை ஆணையா் (வெளிப்புறம்) சச்சின் சா்மா கூறியதாவது: இந்த முயற்சி சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் சமூக உறுப்பினா்களுக்கும் இடையே நேரடி தொடா்புக்கு வழிவகுத்தது. கூடுதல் துணை ஆணையா்கள், உதவி துணை ஆணையா்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்ட சமூக மையங்களில் அமா்வுகளுக்கு தலைமை தாங்கி குடியிருப்பாளா்களின் கவலைகளை நிவா்த்தி செய்தனா்.
இந்த நிகழ்வில் நல்ல பங்கேற்பு காணப்பட்டது. மேலும், அனைத்து இடங்களிலும் மொத்தம் 140 குறைகள் தீா்க்கப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான புகாா்கள் நங்லோயில் இருந்தன. அங்கு 70 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டன. அதைத் தொடா்ந்து, பஸ்சிம் விஹாரில் 35, மங்கோல் பூரியில் 25 மற்றும் சுல்தான் பூரியில் 10 புகாா்கள் வந்தன.