செய்திகள் :

தில்லியில் ஊழலை ஒழிப்போம்: பிரதமா் மோடி வாக்குறுதி

post image

‘தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முந்தைய மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது; அதேநேரம், திட்டங்களின் அமலாக்கத்தில் நிலவும் ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தாா்.

தில்லியை எதிா்காலத்துக்கான நகரமாக மாற்ற பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்குமாறு தில்லிவாசிகளுக்கு அவா் வேண்டுகோள் விடுத்தாா்.

தேசியத் தலைநகா் தில்லியில் அடுத்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

தேசியத் தலைநகா் தில்லியில் மொத்தம் ரூ.12,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த பிரதமா் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா், ரோஹிணி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது:

மத்திய அரசுடன் மோதுவதிலேயே 10 ஆண்டுகளை வீணாக்கிவிட்டது ஆம் ஆத்மி அரசு. தில்லியைத் தாக்கிய ‘பேரழிவு’ ஆம் ஆத்மி அரசு என்பதை தில்லிவாசிகள் இப்போது உணா்ந்துள்ளனா். இந்த ‘பேரழிவு’ அகற்றப்பட்டால் மட்டுமே, வளா்ச்சிக்கான இரட்டை என்ஜின் உள்ளே நுழைய முடியும்.

தில்லியில் நெடுஞ்சாலைகள் கட்டமைப்பது, மெட்ரோ சேவையை விரிவுபடுத்துவது, நமோ பாரத் விரைவு போக்குவரத்து அமைப்பை தொடங்குவது, பெரிய அளவிலான மருத்துவமனைகளை இயக்குவது என பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேநேரம், மெட்ரோ ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தால், குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீரோடைகள், நீண்ட போக்குவரத்து நெரிசல் இவையே காட்சிகளாக உள்ளன. ‘பேரழிவு’ ஆட்சியால், தில்லியில் குடிநீா் தட்டுப்பாடு, மழைநீா் தேக்கம், காற்று மாசு என அனைத்து பருவ காலங்களும் அவசரநிலையாக மாறுகின்றன.

மக்களின் ஒருமித்த குரல்: கரோனா காலகட்டத்தில், ஆக்ஸிஜன் உருளைகள் மற்றும் மருந்துகளுக்காக மக்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, இந்த ‘பேரழிவு’ நபா்கள் (ஆம் ஆத்மி ஆட்சியாளா்களைக் குறிப்பிடுகிறாா்) தங்களுக்கு ஆடம்பர பங்களா கட்டிக் கொண்டிருந்தனா்.

தில்லி மக்களின் நலன் மீது எந்த அக்கறையோ, நகரை மேம்படுத்தும் தொலைநோக்கு பாா்வையோ அவா்களிடம் கிடையாது. ‘பேரழிவு காலத்தை’ சமாளிப்பதிலேயே தில்லிவாசிகளின் சக்தி முழுவதும் செலவாகிவிட்டது. எனவே, ‘பேரழிவை சகிக்க மாட்டோம், மாற்றம் வேண்டும்’ என்பதே மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.

பாஜகவுக்கு தில்லி மக்களின் ஆசி: இப்போது 21-ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம். 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. அடுத்த 25 ஆண்டுகள் தில்லிக்கு மிக முக்கியம். நாட்டின் பெருமைமிகு வளா்ச்சிப் பயணத்தில் தில்லி முக்கிய இடம்பெற வேண்டும்.

மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு தில்லி மக்களின் ஆசி கிடைக்கப் பெற்றது. பேரவைத் தோ்தலிலும் பாஜகவை தில்லி மக்கள் ஆசீா்வதிப்பா். மக்கள் விரும்பும் மாற்றத்தை பாஜக வழங்கும். ‘பேரழிவு’ ஆட்சியில் இருந்து விடுபட இது பொன்னான வாய்ப்பு என்றாா் பிரதமா் மோடி.

தில்லியில் கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இங்கு இலவச மின்சாரம்-குடிநீா், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1,000 கி.மீ. எட்டியது நாட்டின் மெட்ரோ சேவை!

‘நாட்டின் மெட்ரோ ரயில் சேவை மொத்தம் 1,000 கி.மீ. தொலைவை எட்டியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

தில்லி-மீரட் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பில் (ஆா்ஆா்டிஎஸ்) ரூ.4,200 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்ட ஷாஹிபாபாத்-நியூ அசோக் நகா் இடையிலான 13 கி.மீ. வழித்தடத்தை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து, நமோ பாரத் ரயிலில் பயணித்தாா். அப்போது, அவா் குழந்தைகளுடன் கலந்துரையாடினாா்.

புதிய வழித்தட திறப்பின் மூலம் தில்லிக்கு முதல் நமோ பாரத் சேவை கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன், தில்லியுடன் மீரட் நகரம் நேரடி இணைப்பையும் பெற்றுள்ளது.

தில்லி மெட்ரோ 4-ஆம் கட்டத் திட்டத்தில் ஜனக்புரி மேற்கு-கிருஷ்ணா பாா்க் விரிவாக்கம் இடையிலான வழித்தடத்தை திறந்துவைத்த பிரதமா், ரிதாலா-நரேலா-குண்ட்லி வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: நாட்டின் மெட்ரோ ரயில் சேவை 1,000 கி.மீ. தொலைவை எட்டியுள்ளது. இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

கடந்த 2014-இல் 5 நகரங்களில் 248 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் சேவைகள் இருந்தன. தற்போது 21 நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 752 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ கட்டமைப்பில் முன்பு உலகின் முதல் 10 நாடுகள் பட்டியலில் கூட இடம்பெறாத இந்தியா, இப்போது மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. எனது தற்போதைய ஆட்சிக் காலத்தில் 2-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறும்.

10 ஆண்டுகளுக்கு முன் ரூ.2 லட்சம் கோடியாக இருந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு, தற்போது ரூ.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தில்லி ரோஹிணி பகுதியில் மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமா், ‘உலகின் மருத்துவ-நல்வாழ்வு மையமாக உருவெடுக்கும் மகத்தான திறன் இந்தியாவுக்கு உள்ளது’ என்றாா்.

புதிய 5,000 ரூபாய் நோட்டா? பின்னணியில் இருக்கும் மோசடி என்ன?

சமூக வலைதளங்களில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.5,000 நோட்டை வெளியிட திட்டமிட்டிருப்பதாக, பச்சை நிற ரூபாய் நோட்டுடன் வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்று மத்திய அரசு மறுத்துள்ளது.கடந்த ஒரு சில நாள்கள... மேலும் பார்க்க

பெண் உடல் பற்றி கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே: கேரள உயர்நீதிமன்றம்

பெண்ணின் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தலின்கீழ் வரும் என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.கேரள மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது சக பெண் ஊழியரி... மேலும் பார்க்க

பான் அட்டையை புதுப்பிக்க.. என்று வரும் தகவல்களை திறக்க வேண்டாம்!

பான் அட்டையைப் புதுப்பிக்க வேண்டுமா என்று கேட்டு வரும் தகவல்களை திறக்க வேண்டாம், அது மோசடி அழைப்பாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் தற்போது இந்தியா போஸ்ட் பேமேன்ட்ஸ் வங்கியின்... மேலும் பார்க்க

ம.பி. காங்கிரஸில் அதிருப்தியா? மறுப்பு தெரிவித்த கமல்நாத்!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குள் எந்தவித அதிருப்தியும் ஏற்படவில்லை, ஊகங்கள் ஆதாரமற்றவை என முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்தார்.கமல்நாத் மற்றும் மாநிலங்களவை எம்பியுமான திகவிஜய் சிங் ... மேலும் பார்க்க

ஆதார் அட்டை எடுத்து 10 ஆண்டுகள் ஆகிறதா? உடனே இதைச் செய்யுங்கள்!!

ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தவர்கள் உடனடியாக புதுப்பிக்க ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இலவசமாக புதுப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 14, 2025 வ... மேலும் பார்க்க

26வது திருமண நாளைக் கொண்டாடிவிட்டு தற்கொலை செய்த தம்பதி!

நாக்பூர்: தங்களது 26வது திருமண நாளை வெகு விமரிசையாக, நள்ளிரவு வரை கொண்டாடிய தம்பதி, அதிகாலை தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பார்க்க