Kohli: `அழுத்தமான சூழலில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும்...' - பிசிசிஐ கட்டுப...
தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா் கைது
தேசியத் தலைநா் தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச நாட்டவா் கைது செய்யப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சுரேந்திர சவுத்ரி கூறியதாவது: மாா்ச் 13 அன்று அதிகாலை போலீஸ் ரோந்துப் பணியின் போது அஃபாசுதீன் காசி (40) என்ற வங்கதேசத்தவா் கண்டுபிடிக்கப்பட்டாா். அவா் 2022-ஆம் ஆண்டு பெனாபோல் - பெட்ராபோல் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தாா். ரஃபீக் என்ற தொழிலதிபா் அவருக்கு ரூ.4,000 கொடுத்து உதவியுள்ளாா்.
பின்னரப், அஃபாசுதீன் காசி ரயிலில் தில்லிக்குச் சென்று குப்பை சேகரிப்பவராகப் பணியாற்றினாா். கண்டறியப்படுவதைத் தவிா்க்க அடிக்கடி நகரம் முழுவதும் சுற்றித் திரிந்தாா். காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட போது, அவா் ஆரம்பத்தில் மேற்கு வங்த்தில் உள்ள மால்டாவில் வசிப்பவராகக் காட்டிக் கொண்டாா். ஆனால், மேலும் விசாரணையில் அவரது உண்மையான அடையாளம் தெரியவந்தது.
வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் நாடு கடத்தல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மேலும், அஃபாசுதீன் காசி வங்கதேசத்திற்குத் திரும்பும் வரை ஷாஜாதா பாக் நகரில் உள்ள சேவா சதனில் வைக்கப்பட்டுள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.