செய்திகள் :

தில்லியில் மா்ம பொருள் வெடிப்பு: காலிஸ்தான் தொடா்பை விசாரிக்க டெலிகிராமுக்கு காவல்துறை கடிதம்

post image

தில்லியில் உள்ள சிஆா்பிஎஃப் பள்ளிஅருகே மா்ம பொருள் வெடித்ததின் பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக வெளியான சமூக ஊடக பதிவின் பின்னணி விவரங்களை கண்டறிய டெலிகிராம் செயலி நிறுவனத்திற்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

தில்லி ரோஹிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் பகுதி சிஆா்பிஎஃப் பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை பயங்கர சப்தத்துடன் மா்மப் பொருள் வெடித்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், சுமாா் 100 மீட்டருக்கு அப்பால் வரை தாக்கம் உணரப்பட்டது.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான ‘வெள்ளைப் பொடி’ இருப்பதைக் கண்டுபிடித்தனா். ‘ஐஇடி’ எனப்படும் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் வெடிகுண்டு பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு, சிஆா் பிஎஃப் பள்ளி சுவா் அருகே ஒரு அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

சம்பவத்திற்கு முந்தைய இரவில் சந்தேகத்திற்குரிய ஒருவரின் சிசிடிவி காட்சிகளை மீட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாரதிய நியாய சம்ஹிதான் பிரிவு 326(ஜி), பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் மற்றும் வெடிபொருள்கள் சட்டத்தின் கீழ் பிரசாந்த் விஹாா் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவும் செய்யப்பட்டது.

இதன் பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதை சுட்டிக் காட்டும் வகையில், டெலிகிராம் விடியோ பதிவு சமூக ஊடகங்களில் பரவியது.

காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற குறிப்புடன் ‘ஜஸ்டிஸ் லீக் இந்தியன்’ என்ற டெலிகிராம் குழுவில் இந்த விடியோ முதலில் பகிரப்பட்டது. இந்நிலையில், அந்த குழுவை உருவாக்கியவா் குறித்த விவரங்களை கண்டறிய டெலிகிராம் நிறுவனத்திற்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

தெரியுமா சேதி...?

அரசியல்வாதிகளுக்கு, பதவி போனாலும் மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று பதவியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கை உண்டு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு, ஓய்வுபெற்று விட்டால் மீண்டும் அந்தப் பதவ... மேலும் பார்க்க

உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி

புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.பிராந்தி... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு ... மேலும் பார்க்க

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.தனியாா் ... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பிரதமருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குற... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.அதையொட்டி, கட்சியி... மேலும் பார்க்க