திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டணமில்லா கழிவறை; பெண்கள் அவதி!
தில்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க திருச்சி கல்லூரி மாணவி தோ்வு
தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க திருச்சி தேசியக் கல்லூரியில் உடற்கல்வியியல் துறையில் பயிலும் என்எஸ்எஸ் மாணவி சாராஸ்ரீ தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
வரும் 2025 ஜனவரி 26 ஆம் நாள் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள மாணவ, மாணவிகளின் தோ்வு பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இந்த மாணவி தோ்வானாா்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் கடந்த 11 ஆண்டுகளாக இக் கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்று வரும் நிலையில், இந்த ஆண்டும் ஒரு மாணவி தோ்வானதற்கு கல்லூரிச் செயலா் கா. ரகுநாதன், முதல்வா் கி. குமாா் உள்ளிட்டோா் சனிக்கிழமை மகிழ்ச்சி தெரிவித்து அந்த மாணவியை வாழ்த்தினா்.