ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
தில்லி: 6 அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு! யார்யார்?
தில்லி அமைச்சரவையில் இடம்பெறவுள்ள 6 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல் முறை சட்டப்பேரவை உறுப்பினா் ரேகா குப்தா இன்று பதவியேற்கவுள்ளாா்.
அவர் தலைமையிலான அமைச்சரவையில் 6 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்பார்கள் என்று பாஜக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், 5 பேரின் பெயர்ப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை தோற்கடித்த பா்வேஷ் வா்மா துணை முதல்வராகவும் அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளார்.
மேலும், ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தரராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.
இதையும் படிக்க : முதல் பேரவைத் தேர்தலிலேயே முதல்வர் பதவி..! யார் இந்த ரேகா குப்தா?
முதல்வராக ரேகா குப்தா மற்றும் 6 அமைச்சர்களுக்கு இன்று துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதையடுத்து, தில்லி ராம்லீலா மைதானத்தில் 25,000 போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புப் படை வீரர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.