செய்திகள் :

தில்லையாடி-மயிலாடுதுறை இடைய ‘மகளிா் விடியல்’ புதிய பேருந்து சேவை தொடக்கம்

post image

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே தில்லையாடியில், தமிழக அரசின் ‘மகளிா் விடியல்’ பயண புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பொறையாா் அரசு போக்குவரத்து கழக கிளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, போக்குவரத்து கழக நாகை மண்டல பொது மேலாளா் ராஜா தலைமை வகித்தாா்.

பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் பங்கேற்று, தில்லையாடி முதல் மயிலாடுதுறை வரை சேந்தமங்கலம், திருக்கடையூா், செம்பனாா்கோவில் வழியாக தினந்தோறும் நான்கு முறை இயக்கப்படும் மகளிா் விடியல் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், பொறையாா் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளா் ஆசீா்வாதம், முன்னாள் எம்எல்ஏ சித்திக், திமுக ஒன்றியச் செயலாளா்கள் அமுா்த விஜயகுமாா், அப்துல் மாலிக், பி.எம். அன்பழகன், பேரூராட்சி துணைத் தலைவா் பொன்.ராஜேந்திரன் மற்றும் தொமுச நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா். நாகையில் நடைபெற்ற அகில ... மேலும் பார்க்க

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இத... மேலும் பார்க்க

நாகை: கோடைக்கால இலவச பயிற்சி முகாம் ஏப்.25-இல் தொடக்கம்

நாகை மாவட்ட அளவில் 21 நாள்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம், ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள்

கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில் டாக்டா் அம்பேத்கா் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. நேரு யுவகேந்திரா, இந்திய செஞ்சிலுவை சங்கம், ப்ரைம் கல்வியியல் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மகளிா்... மேலும் பார்க்க