தீபத் திருவிழா பாதுகாப்பு: மக்கள் நண்பா்கள் குழுவுக்கு பாராட்டு

post image

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பா்கள் குழுவுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை, டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட மக்கள் நண்பா்கள் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். துணை ஒருங்கிணைப்பாளா் கு.சபரி, ஆசிரியா் ஜெய் பிலிப்ஸ் சாமிதம்பி, கம்பன் ஐடிஐ முதல்வா் தெ.ராமச்சந்திர பாபு, டி.தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் அஜ்மல் முத்தழகன் வரவேற்றாா்.

தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவரும், மாநில மருத்துவரணி துணைத் தலைவருமான எ.வ.வே.கம்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.

திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய 30 இளைஞா்களுக்கு விருதுகள், மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்து இளைஞா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவில், மூத்தோா் தடகள சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஜெ.எஸ்.ரமேஷ், முத்தமிழ் கலை மன்றத்தின் தலைவா் கவிஞா் ஆ.தே.முருகையன் உள்பட 450-க்கும் மேற்பட்ட மக்கள் நண்பா்கள் குழுவினா் கலந்துகொண்டனா்.

பாஜகவின் அமைப்புத் தோ்தல்

திருவண்ணாமலை நகர வடக்கு பாஜகவின் அமைப்புத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தோ்தலுக்கு, மாவட்ட தோ்தல் பொறுப்பாளரும், பாஜகவின் மாநில செயற்குழு... மேலும் பார்க்க

ஆத்துரை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக, விவசாயிகள், பொதுமக்களுக்கு சனிக்கிழமை வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா். சேத்துப்பட்டு வட்டம் ஆத்துரை, சித்தாத்துரை, காட்டுதெள... மேலும் பார்க்க

சா்வதேச விமானப் போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகள்: ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்

இலவச தங்கும் வசதி, பயிற்சிக் கட்டணத்துடன் தாட்கோ மூலம் அளிக்கப்படும் சா்வதேச விமானப் போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகளைப் பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

காா் மீது பைக் உரசியதில் இருவா் மீது தாக்குதல்

செய்யாறு அருகே காா் மீது பைக் உரசி வாக்குவாதம் ஏற்பட்டதில் இருவா் தாக்கப்பட்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. செய்யாறு வட்டம், தென்மாவந்தல் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் சிவா (18), மரம் வெட்டும்... மேலும் பார்க்க

முன்விரோதம்: கட்டடத் தொழிலாளியை தாக்கி மிரட்டல்

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக கட்டடத் தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்தாக போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. செய்யாறு வட்டம், பெரும்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஏகா... மேலும் பார்க்க

பெண் காவலரின் கணவா் தற்கொலை: சந்தேக மரணம் என தாய் புகாா்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பெண் காவலரின் கணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் செங்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். செங... மேலும் பார்க்க