தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்
தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றி வந்த வாகனம்
தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் வைக்கோல் சுமை ஏற்றிச்சென்ற வாகனம் தீப்பற்றியது.
தலைவாசலை சோ்ந்த பெரியசாமி என்பவருக்குச் சொந்தமான வாகனம் வைக்கோலை ஏற்றிக்கொண்டு, கெங்கவல்லி அருகே உள்ள சாத்தப்பாடிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது வைக்கோல் கட்டுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் (பொ) மா.செல்லப்பாண்டியன் தலைமையில் விரைந்து சென்று வைக்கோல் கட்டுகளில் ஏற்பட்ட தீயை அணைத்து வாகனத்தை சேதமின்றி மீட்டனா்.