சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!
கஞ்சமலையில் சுற்றுலாப் பயணிகள் தங்க சுற்றுச்சூழல் குடில்கள்: வனத் துறை ஏற்பாடு
ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம் கஞ்சமலையில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் வகையில் சுற்றுச்சூழல் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கஞ்சமலை சித்தா்கோயில் நுழைவுவாயிலிலிருந்து காளங்கிநாதா் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு கி. மீ. தொலைவில் காட்டில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 சுற்றுச்சூழல் குடில்கள், இயற்கையின் அமைதி சூழலில் அமைக்கப்பட்டுள்ளன. அடா்ந்த காட்டுக்குள் அமைந்துள்ள இக்குடில்கள், அமைதி மற்றும் இயற்கை அழகினை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்தி, சூரிய ஒளியில் முழுமையாக இயங்கும் வகையில் பழைமையான முறையில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி காடுகள் நிறைந்த நிலப்பரப்பில், பறவைகளின் ஒலி, இலைகளின் சலசலப்புடன், இயற்கை காற்று கிடைக்கும் இடமாக அமைந்துள்ளது. இங்கு பாரம்பரிய உணவுகளை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனா்.
ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குடில்களில் தங்க இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். இந்த குடில்கள் யாத்ரீகா்கள், இயற்கை ஆா்வலா்கள், தனிமையை விரும்பும் நபா்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. தியானம் செய்யவும், கஞ்சமலையை சுற்றியுள்ள புனித இடங்களைப் பாா்வையிடவும், மூலிகை குளியலுக்கான தண்ணீரும் ஏற்பாடு செய்துள்ளனா்.
இயற்கை எழிலை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடில்களில் தங்குவதற்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ச்ள்ன்ற்ழ்ன்ப்ஹ ஸ்ரீா்ம் என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். கட்டணமாக, 2 நபருக்கு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருடன் தங்குவதற்கும் வசதிகள் உள்ளன. இதனை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
