பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
தீவிர பயிற்சியில் ஹேசில்வுட்..! போலாண்ட் நீக்கப்படுவாரா?
காபா ஆடுகளத்தில் வரும் டிச.14ஆம் தேதி நடைபெறவிருக்கும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸி. வேகப் பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் கலந்துகொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
2ஆவது டெஸ்ட்டான அடிலெய்ட்டில் ஹேசில்வுட் காயத்தால் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக ஸ்காட் போலாண்ட் விளையாடி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
தற்போது 3ஆவது டெஸ்ட்டுக்காக ஹேசில்வுட் பயிற்சி எடுத்து வருகிறார்.
இது குறித்து மிட்செல் மார்ஷ் கூறியதாவது:
32 வயதாகும் ஹேசில்வுட் தனது நீண்டநாள் நண்பர் மிட்செல் ஸ்டார்க்குடன் 45 நிமிட தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டார். இரண்டாவது பந்துவீச்சு பயிற்சியாளர் டான் வெட்டோரியும் உடன் இருந்தார்.
ஹேசில்வுட் மிகவும் சிறப்பான குணம் கொண்டவர். போட்டியின் வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். அணியின் தேர்வர்களும் கேப்டனும் சேர்ந்து அவரை அணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுப்பார்கள் என்றார்.
ஹேசில்வுட் 71 போட்டிகளில் 278 விக்கெட்டுகளும் போலாண்ட் 11 போட்டிகளில் 40 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்கள்.
லயனுக்கு பதிலாக போலாண்ட் தக்கவைப்படுவாரென்றும் போலாண்ட் விளையாட மாட்டார் என்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.