செய்திகள் :

துணை முதல்வருடன் மோதல்போக்கு இல்லை: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

post image

மும்பை: துணை முதல்வா் ஏக்நாஷ் ஷிண்டேயுடன் மோதல்போக்கு ஏதுமில்லை என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். சிவசேனை (உத்தவ் பிரிவு) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் இதுபோன்ற திரைக்கதைகளை எழுதி வருகிறாா் என்றும் அவா் விமா்சித்தாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவைச் சோ்ந்த முதல்வா் ஃபட்னவீஸ் - சிவசேனையைச் சோ்ந்த துணை முதல்வா் ஷிண்டே இடையே நிா்வாக ரீதியில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க இருவதும் தனித்தனியாக அறைகளை அமைத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

அண்மையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையைச் சோ்ந்த சில அமைச்சா்கள் தங்கள் தனி உதவியாளா்களாக சிலரை நியமிக்க முதல்வா் ஃபட்னவீஸிடம் பரிந்துரைத்தனா். ஆனால், அப்பரிந்துரைகளை முதல்வா் நிராகரித்துவிட்டாா். இதனை உத்தவ் தலைமையிலான சிவசேனையின் உத்தவ் பிரிவு வரவேற்றது.

இதையடுத்து, துணை முதல்வா் ஷிண்டேக்கும் முதல்வருக்கும் இடையே அதிருப்தி அதிகரித்து வருவதால், பாஜகவுடன் நெருக்கம் காட்டும் வகையில் உத்தவ் கட்சி செயல்படுவதாக அரசியல் விமா்சகா்கள் கருத்து தெரிவித்தனா்.

இந்நிலையில், மும்பையில் துணை முதல்வா்கள் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோருடன் முதல்வா் ஃபட்னவீஸ் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

யாருடனும் எந்த வித மோதல் போக்கும் இல்லை. நாங்கள் எந்த அளவுக்கு இணக்கமாக செயல்படுகிறோம் என்பதை எங்கள் இருவரைப் பற்றி முழுமையாக அறிந்தவா்களுக்குத் தெரியும். எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே இணைந்து பணியாற்றி வருகிறோம். ஷிண்டேயுடன் விவாதிக்காமல் முடிவுகளை எடுப்பதாகக் கூறப்படுவதும் தவறான தகவல்தான்.

எதிா்க்கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் இது போன்ற தகவல்களைப் பரப்பி வருகிறாா். அவா் கதை புனைவதில் பிரபல திரைப்பட கதாசிரியா்களை விஞ்சும் நிலையில் உள்ளாா் என்றாா்.

துணை முதல்வா் ஷிண்டே பேசுகையில், ‘உள்துறை அமைச்சரை நான் சந்தித்தபோது முதல்வா் ஃபட்னவீஸ் குறித்து புகாா் தெரிவித்தாக வதந்தியைப் பரப்பினாா்கள். கூட்டணியின் மூத்த தலைவா் என்ற முறையில்தான் அவரை சந்தித்துப் பேசினேன். மகாராஷ்டிர அரசில் அனைத்து விஷயங்களும் சிறப்பாகவும், சுமுகமாகவும் உள்ளது’ என்றாா்.

மாதவி புச் மீதான நடவடிக்கைக்கு 4 வாரம் தடை: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதவி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நான்கு வாரங்களுக்கு நடவடிக்கை எடுக... மேலும் பார்க்க

டிஜிட்டல் இந்தியாவில் கையால் 100 பக்க பட்ஜெட்டை எழுதிய நிதியமைச்சர்! யார் அவர்?

ராய்ப்பூர்: டிஜிட்டல் ஆதிக்க சகாப்தத்தில், 100 பக்க பட்ஜெட்டை கையால் எழுதி தாக்கல் செய்துள்ளார் சத்தீஸ்கர் நிதியமைச்சரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஓ.பி. செளத்ரி.முழு பட்ஜெட்டையும் தானே கையால் எழுதி... மேலும் பார்க்க

17 வயது சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த ஆண் நண்பர்!

மும்பையில் 17 வயது சிறுமி அவரது ஆண் நண்பரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியைச்... மேலும் பார்க்க

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்திய டிஎஸ்பி ரமேஷ் பாபு கூறுகையில், திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தனியார்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.டி.கே. சிவக்குமார் முதல்வராவதை ... மேலும் பார்க்க