மாதவி புச் மீதான நடவடிக்கைக்கு 4 வாரம் தடை: மும்பை உயர்நீதிமன்றம்
மும்பை: பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதவி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நான்கு வாரங்களுக்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாதபி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிா்வாக இயக்குநா் சுந்தரராமன் ராமமூா்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாதபி புச், சுந்தரராமன் ராமமூா்த்தி உள்ளிட்டோா் மும்பை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா். தங்களது வாதங்களை கேட்காமலும் போதிய கால அவகாசம் வழங்காமலும் இந்த உத்தரவை மும்பை சிறப்பு நீதீமன்றம் பிறப்பித்ததாக அவா்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டனா்.
இதையும் படிக்க : கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!
அவசர வழக்ககாக இந்த மனுக்கள் மும்பை உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜி.திகே தலைமையிலான அமா்வின் முன் பட்டியலிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவுள்ளதால், அதுவரை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஊழல் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்ற அமா்வு தெரிவித்தது.
இந்த நிலையில், மாதவி புச் உள்ளிட்டோரின் வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய புகார்தாரருக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது, அதுவரை மாதவி உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.