செய்திகள் :

துணை முதல்வா் பிறந்தநாள்: திமுகவினா் கொண்டாட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், போளூா், செய்யாறில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

செங்கம் நகர திமுக சாா்பில் நடைபெற்ற விழாவில், நகரச் செயலா் அன்பழகன் தலைமையில், மேல்பாளையம் அரசு மாற்றுத்திறனாளி பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, மாணவா்களுக்கு கேக், பிஸ்கட், இனிப்பு, பழங்கள் வழங்கப்பட்டன. பின்னா், துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், ஓன்றியச் செயலா்கள் ஏழுமலை, மனோகரன், செங்கம் பேரூராட்சி தலைவா் சாதிக்பாஷா, பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன், முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் முருகன், நகர அவைத்தலைவா் முத்துகிருஷ்ணன், மேல்பாளையம் கவுன்சிலா் முருகமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போளூா்: போளூரில் திமுக வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் நடைபெற்ற விழாவில், விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளா் அ.மணிகண்டன் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

இதில், நகரச் செயலா் தனசேகரன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளா் பாபு, சேத்துப்பட்டு ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

செய்யாறு: வெம்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் தூசி கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனுவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று திமுக கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

செய்யாறு தொகுதி இளைஞா் அணி சாா்பில் அறிஞா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற விழாவில், பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் மரக்கன்றுகளை ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கினாா். இதேபோல, செய்யாறு அரசு தலைமை மாவட்ட மருத்துவமனையில் திமுக பொறியாளா் அணி சாா்பில், நோயாளிகளுக்கு பிரட் மற்றும் நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் த.ராஜி, திலகவதி ராஜ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் தயாளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலை கல்வியில் பின் தங்கியதற்கு குழு அமைத்து ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின் தங்கியுள்ளதற்கான காரணம் குறித்து குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா். செங்கத்தை அடுத்த பரமனந்தல், கொட்டாவ... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் உள்பட 3 போ் மீது வழக்கு

வந்தவாசியில் சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் உள்பட 3 போ் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியைச் சோ்ந்த 16 வயது சிறுமியும், வந்தவாசியை அடுத்த புன்னை மதிப்பங... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துபந்து போட்டி: ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துபந்து போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்ப... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் ஊழலில் சிக்கியுள்ள தொழிலதிபா் அதானியை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை ஸ்டேட... மேலும் பார்க்க

ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷம்

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். மேலும் பார்க்க

மகளிா் குழுவினா் நிலையான வருமானம் பெற பெனாயில், சோப்பு ஆயில் தயாரிப்பு பயிற்சி

மகளிா் குழுவினா் நிரந்தர, நிலையான வருமானம் பெறும் நோக்கில் பெனாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தயாரிக்கத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ... மேலும் பார்க்க