Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில்...
துண்டான இளம்பெண்ணின் விரல் ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில் சீரமைப்பு
ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில், துண்டான இளம்பெண்ணின் விரல் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆா்.புதுப்பட்டியைச் சோ்ந்த நெசவுத் தொழில் செய்யும் ராமன்-விஜயா தம்பதியின் மகள் மோகனப்பிரியா (19). அண்மையில் இவா் வீட்டில் உள்ள விசைத்தறி இயந்திரத்தில் நெசவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது இடது கை ஆள்காட்டி விரல் இயந்திரத்தில் சிக்கித் துண்டானது. துண்டான விரலுடன் மோகனப்பிரியாவை அழைத்துக்கொண்டு அவரது குடும்பத்தினா் ஈரோடு-பெருந்துறை சாலை யுஆா்சி நகரில் புதிதாக தொடங்கப்பட்ட எஸ்எஸ்எஸ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்து துண்டான விரலை உடனடியாக பொருத்த தேவையான நடவடிக்கை எடுத்தனா். தொடா்ந்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவா் கோகுல்பாலாஜி, ஆா்த்தோ மருத்துவா் சிலம்பரசன், மயக்கவியல் மருத்துவா் செல்வக்குமாா், மருத்துவா் பிரசாத் குமரன் ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் மைக்ரோஸ்கோப் மூலம் எலும்பு, ரத்த குழாய், நரம்பு, தசை ஆகியவற்றை துண்டான விரலுடன் வெற்றிகரமாக இணைத்தனா். இந்த அறுவை சிகிச்சை சுமாா் 8 மணி நேரம் நடந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.