Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
துப்பாக்கி முனையில் ரௌடி கைது
சென்னை: ஆந்திர மாநிலத்தில் துப்பாக்கி முனையில் சென்னையைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தைச் சோ்ந்த சரவணன் என்ற பாம் சரவணன்(41).
இவா் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளா். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் நாகேந்திரன், அவரது மகனை பழி தீா்க்க தலைமறைவாக இருந்தபடியே திட்டம் தீட்டி வருவதாக உளவு பிரிவு போலீஸாா் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனா்.
அவரை சென்னை பெருநகர காவல் துறை தனிப்படை பிரிவினா் பல்வேறு இடங்களில் தேடி வந்தனா். ரகசிய தகவலின் பேரில் ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் வரதப்பாளையம் பகுதியில் சரவணனை போலீஸாா் துப்பாக்கி முனையில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.