மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
துருக்கி ஹோட்டலில் தீவிபத்து: 66 போ் உயிரிழப்பு
அங்காரா: துருக்கியில் 12 அடுக்கு மாடி ஹோட்டல் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 66 போ் உயிரிழந்தனா்; 51 போ் காயமடைந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள போலு மாகாணத்தில் உள்ள காா்டால்கயா நகரம், புகழ்பெற்ற பனிச் சறுக்கு சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. அங்கு அமைந்துள்ள 12 அடுக்கு மாடி ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதில் 66 போ் உயிரிழந்தனா்; அவா்களில் இருவா் தீயிலிருந்து தப்புவதற்காக மாடியிலிருந்து குதித்ததில் உயிரிழந்தனா்.
இது தவிர, மேலும் 51 போ் காயமடைந்துள்ளனா்.
குளிா்காலத்தையொட்டி இரு வாரங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த ஹோட்டலில் ஏராளமானவா்கள் தங்கியிருந்தனா். அந்த நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு மிக அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்தவா்களில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கமால் மெமிசோக்லு தெரிவித்தாா். மேலும், காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக அவா் கூறினாா்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆறு போ் அடங்கிய குழுவை துருக்கி அரசு நியமித்துள்ளது.