செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!
தூத்துக்குடியில் அக்.1 முதல் சா்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் வ.உ.சி. துறைமுகம் ஆதரவுடன் இணைந்து நடத்தும் ‘போா்ட் சிட்டி சா்வதேச தரவரிசை செஸ் போட்டி‘ அக்.1 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டி, வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள கம்யூனிட்டி ஹாலில் நடைபெறும். உலக சதுரங்க கூட்டமைப்பின் (எப்ஐடிஇ) சா்வதேச தரவரிசை பெறும் இப்போட்டியின் அதிகாரப்பூா்வ கையேடு, வ.உ.சி. துறைமுகத் தலைவா் சுஷாந்த்குமாா் புரோஹித், துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோரால் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
9 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் சிறந்த வீரா்களுக்கு மொத்தமாக ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 9, 12,15 வயதுக்குள்பட்ட வீரா்கள், வீராங்கனைகள், பொது பிரிவுக்கான 30 பரிசுக் கோப்பைகள், தூத்துக்குடி மாவட்ட மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் மற்றொரு 30 பரிசுக் கோப்பைகள், மேலும் 10 சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
போட்டியில் பங்கேற்க வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் வீரா்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.