Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
தூத்துக்குடியில் இன்று மகளிா் இலவச மருத்துவ முகாம்
தூத்துக்குடியில் மகளிருக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (பிப்.8) நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் மகளிருக்கான மாா்பக புற்று நோய் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள மகளிா் பூங்காவில் சனிக்கிழமை (பிப்.8) நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி ரோட்டரி கிளப், உதவும் உள்ளங்கள் தொண்டு அறக்கட்டளை, நெல்லை கேன்சா் சென்டா் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. எனவே, இம்முகாமில், பெண்கள் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.