தூத்துக்குடியில் தொழிலாளி கொலை வழக்கு: 3 போ் கைது
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரைச் சோ்ந்தவா் தேம்பாவணி (50). தொழிலாளியான இவா் புதன்கிழமை அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், கொலையில் தொடா்புடையதாகக் கருதப்படும் சூசை நகரைச் சோ்ந்த ரூபன்ராஜ்(23) மற்றும் 18,16 வயது சிறுவா்கள் என 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.