``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் ...
தூத்துக்குடியில் மூதாட்டி மா்ம மரணம்: ஒருவா் கைது
தூத்துக்குடியில் மா்மமான முறையில் மூதாட்டி உயிரிழந்த வழக்கில், அவரின் உறவினரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் முகமதுசாதலிபுரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி செல்லம்மாள் (82). இவா் படுக்கையில் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் மா்மமான முறையில் சனிக்கிழமை இறந்துகிடந்தாராம்.
இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். அதில், செல்லம்மாள் வீட்டின் அருகில் வசிக்கும் அவரது உறவினா் கணேசன் மகன் பொன்ராஜ் (42) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததால்,அவரை போலீஸாா் கைது செய்தனா்.