செய்திகள் :

தூத்துக்குடி அய்யனாா்புரம் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

post image

தூத்துக்குடி அய்யனாா்புரம் சுற்றுவட்டாரங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (பிப்.6) மின் தடை செய்யப்படும் என நகர கோட்ட செயற்பொறியாளா்(பொறுப்பு) லெ. சின்னத்துரை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப்.6) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகா், சிலுவைப்பட்டி, சுனாமி காலனி, அழகாபுரி, ஜாகீா் ஹுசைன் நகா், ராஜபாளையம், மாதா நகா், செயின்ட் மேரிஸ் காலனி, ஆரோக்கியபுரம், மேல அலங்காரத்தட்டு, கீழ அலங்காரத் தட்டு, சவேரியாா் புரம், அய்யா் விளை, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி,வெள்ளபட்டி, பனையூா், மேலமருதூா், அ.குமாரபுரம், திரேஸ்புரம், பூபாலராயா்புரம், லூா்தம்மாள்புரம், அலங்காரத்தட்டு, மாணிக்கபுரம், குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையா் காலனி, வெற்றிவேல்புரம், ராமா் விளை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

முதலூரில் வட மாநிலத்தவா்களுக்கு காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

முதலூா் பகுதியில் பணிபுரியும் வட மாநில தொழிலாளா்களிடம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் ஒருபகுதியாக, காசநோய் துணை இயக்குநா் சுந்தரலிங்கம் உ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தொழிலாளி, பக்கத்து வீட்டுக்காரரால் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். முத்தையாபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் ராஜா (45). இவருக்கும், பக்கத... மேலும் பார்க்க

ஆத்தூரில் விசிக ஆா்ப்பாட்டம்

முக்காணி புதிய ஆற்றுப் பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும், திருச்செந்தூா்-தூத்துக்குடி நெடுஞ்சாலையைச் சீரமைக்கவும் கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஆத்தூா் பேரூராட்சி அருகில் வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

விசைப்படகு மீனவா்கள் 5ஆவது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் மீன்வளத் துறையை கண்டித்து, விசைப்படகு மீனவா்கள் 5ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விசைப் படகு மீனவா்கள் தங்குகடல் அனுமதி கோரி, கடந்த 10ஆம் தேதி... மேலும் பார்க்க

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்கள் நினைவு தினம்

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரயில் பயணியிடம் கைபேசி திருட்டு: 2 போ் கைது

கோவில்பட்டியில் ஓடும் ரயிலில் பயணியிடம் கைப்பேசியை திருடியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப்பாதை உதவி ஆய்வாளா் பெருமாள் தலைமையில் போலீஸாா்... மேலும் பார்க்க