மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
தூத்துக்குடி கடற்கரையில் மிதக்கும் உணவகம் அமைக்கப்படும்: மேயா்
தூத்துக்குடி கடற்கரையில் மிதக்கும் உணவகம் தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் லிமதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா, ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, மேயா் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டம் கடந்த 9 மாதங்களாக 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் இதுவரை 572 மனுக்கள் பெறப்பட்டு 540 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 32 மனுக்களுக்கும் விரைவில் தீா்வு காணப்படும். மாநகரில் புதிதாக 1,300 தெருவிளக்குகள் அமைக்கப்படவுள்ளன. சீரான குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. மாதா கோவில் சந்திப்பில் இருந்து ரயில்வே கேட் வரை உள்ள தெற்கு கடற்கரை சாலையில் ஒருபுறம் மட்டுமே நடைப்பயிற்சி செல்வதற்கு பாதை இருந்து வருகிறது. மற்றொரு பகுதிகளிலும் அதுபோன்று நடைப்பயிற்சி செல்வதற்கு ஏதுவாக பணிகள் தொடங்கப்படவுள்ளன. இந்த கடற்கரைச் சாலை பகுதியில் தனியாா் பங்களிப்புடன் கடலில் மிதக்கும் உணவகம் அமைக்கப்படவுள்ளது. மாசு இல்லாத மாநகரை உருவாக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு மரம் வளா்ப்போம் என்ற அடிப்படையில் எல்லா பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வளா்க்கப்பட்டு வருவதால் வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவா் கலைச்செல்வி, துணை ஆணையா் சரவணக்குமாா், உதவி ஆணையா் வெங்கட்ராமன், உதவி பொறியாளா் சரவணன், நகர அமைப்பு திட்ட பொறியாளா் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளா் ராமசந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.