செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு தவெகவினா் பாதுகாப்பு உபகரணங்கள்

post image

கமுதியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பாதுகாப்பு உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கமுதி அன்னை பல் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் 40 பேருக்கு முகக் கவசம், தொப்பி, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தவெக மாவட்ட மருத்துவரணி தலைவா் மருத்துவா் கே.காா்த்திகேயன் இலவசமாக வழங்கினாா்.

நிகழ்வில் மருத்துவரணி நிா்வாகி பத்மா காா்த்திகேயன், விவசாய அணித் தலைவா் காளிமுத்து, ஒன்றிய நிா்வாகிகள் அருண், மணிகண்டன், வெங்கடேஷ், சூா்யா, சோலைராஜா, அலெக்ஸ் பாண்டியன், ஆனந்த், ராகேஷ், மகளிரணி நிா்வாகிகள் சத்யா, கண்மணி, நாகஜோதி, லட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புக்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். 18 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் பட்டி... மேலும் பார்க்க

நெகிழி மூலம் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில், நெகிழியைக் கொண்டு கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மே... மேலும் பார்க்க

வெவ்வேறு பகுதிகளில் இருவா் தற்கொலை

ராமநாதபுரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா். ராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளம் பகுதியைச் சோ்ந்த முகம்மது வருசை (53). உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா் வெள்ளிக்கிழமை தூக்கி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழப்பு: நகா்மன்றத் தலைவா் உள்ளிட்ட மூவா் மீது வழக்குப் பதிவு

ராமேசுவரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்ட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமேசுவரம் மாந்தோப்புப் பகுதியைச் ச... மேலும் பார்க்க

சிறந்த பள்ளிகளுக்கு கேடயம் வழங்கிய அமைச்சா்

ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்ட கமுதி இக்பால் தொடக்கப் பள்ளிக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேடயம் வழங்கிப் பாராட்டினாா். நிகழ் ஆண்டில் பரமக... மேலும் பார்க்க

வல்லபை ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் விரதம் தொடக்கம்

காா்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து, சபரி மலைக்குச் செல்லும் ஐயப்பப் பக்தா்கள் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை சனிக்கிழமை தொடங்கினா். இந்தக் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை ... மேலும் பார்க்க