தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் அளிப்பு
புழல் அருகே தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது (படம்).
புழல் ஒன்றியம், வடகரை ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.சுதா்சனம் அறிவுறுத்தலின் பேரில் புழல் ஒன்றிய திமுக பொறுப்பாளா் அற்புதராஜ் தலைமையில் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பிரேம், ஜெசி உள்ளிட்ட பலா் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா். இதில் புழல் ஒன்றிய திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.