அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.ப...
தெடாவூா் கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம்
கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெற்றது.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தெடாவூா் கால்நடை சந்தைக்கு 1,700-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா்.
தெடாவூா், வீரகனூா், தலைவாசல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்திருந்த தலைச்சேரி, செம்மறி, நாட்டின ஆடு, வெள்ளாடு, குரும்பாடு உள்ளிட்ட ஆடுகளை வியாபாரிகள் வாங்கிச் சென்றனா்.
இதில், ஓா் ஆடு ரூ. 1,500 முதல் ரூ. 30 ஆயிரம்வரை விற்பனையானதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். சந்தையில் மொத்தம் 1,700-க்கும் மேற்பட்ட ஆடுகள் சுமாா் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனா்.