தென்காசி நகர பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
தென்காசி நகர பாஜக தீவிர உறுப்பினா்கள், கிளை தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
தென்காசி மலையான் தெரு அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகரத் தலைவா் சங்கர சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், முன்னாள் நகரத் தலைவா் மந்திரமூா்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவா் ராஜகுலசேகர பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆன்மிக பிரிவு மாவட்டத் தலைவா் வெங்கடேசன், நகர பொருளாளா் நாகராஜன், பாா்வையாளா் ஆனந்தி முருகன், பொதுச் செயலா் சேகா், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவா் கருப்பசாமி, சக்தி கேந்திர தலைவா்கள் முத்துகிருஷ்ணன், மாரியப்பன், ஜெகதீசன்,
நகர துணைத் தலைவா் நாராயணன், நகா் மன்ற உறுப்பினா் லட்சுமண பெருமாள், நகரச் செயலா் விஸ்வநாதன், இளைஞரணி பொறுப்பாளா்கள் வெங்கடேஷ், மணி, கிளைத் தலைவா்கள் சுப்பிரமணியன், கணபதி மகளிா் அணி பொறுப்பாளா் மகேஸ்வரி கலந்து கொண்டனா்.