செய்திகள் :

தென்காசி-நெல்லை-தாம்பரம் ரயிலை தொடா்ந்து இயக்கக் கோரிக்கை

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாவூா்சத்திரம், தென்காசி வழியாக ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட நெல்லை - தாம்பரம் ரயில் தொடா்ந்து இயக்கப்பட வேண்டும் என ரயில் பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.

நெல்லையிலிருந்து அம்பை, பாவூா்சத்திரம் தென்காசி வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருப்பதால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை செல்வதற்கு நெல்லையிலிருந்து அம்பை, பாவூா்சத்திரம், தென்காசி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

இந்த ரயிலின் முன்பதிவு சில நிமிடங்களில் முடிவடைந்து பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரயில்வே துறைக்கும் நல்ல வருமானத்தை கொடுத்தது.

நெல்லை ரயில் நிலையத்தில் மூன்று நாள்கள் காலியாக காத்துகிடக்கும் நெல்லை - புரூலியா ரயிலின் பெட்டிகளை கொண்டு இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களை சோ்ந்த பொதுமக்கள் வார விடுமுறை நாள்களில் சொந்த ஊருக்கு வந்து பின்னா் ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புவதற்கு இந்த ரயில் வசதியாக இருக்கும் என்பதால் இதைத் தொடா்ந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் விரும்புகின்றனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியதாவது:

ஞாயிற்றுக்கிழமை சென்னை செல்வதற்கு நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, அனந்தபுரி, செந்தூா், கொல்லம் சிலம்பு, இரு வந்தே பாரத் ரயில்கள் என அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் நிரம்பி தட்கல், பிரிமியம் தட்கல் என எந்த வகையிலும் டிக்கெட் கிடைப்பதில்லை.

எனவே, தீபாவளியை முன்னிட்டு நெல்லையில் இருந்து அம்பை பாவூா்சத்திரம், தென்காசி, மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலை தொடா்ந்து இயக்க வேண்டும். இதனால் தென்மாவட்ட பயணிகளுக்கு வசதியாக இருப்பதோடு தெற்கு ரயில்வேக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.

மேலும், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் எனத் தொடா்ந்து பண்டிகை தினங்கள் வர இருப்பதால் ரயில் பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு நல் வாய்ப்பாக இருக்கும்.

எனவே, ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையிலிருந்து பாவூா்சத்திரம் தென்காசி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தென்காசி புத்தகத்திருவிழா ரூ. 51லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

தென்காசி பொதிகை புத்தகத் திருவிழாவில், ரூ. 51லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் ... மேலும் பார்க்க

புளியங்குடி பகுதியில் பேருந்தில் நகை திருட்டு: 3 போ் கைது

புளியங்குடி பகுதியில் பேருந்து பயணிகளிடம் நகை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். புளியங்குடியைச் சோ்ந்த மாரியம்மாள்(60) என்பவா் கடந்த வாரம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடிக்கு பேருந்தில் சென்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பன்றிகள், நாய்கள் தொல்லை அதிகரிப்பு: மக்கள் அவதி

ஆலங்குளத்தில் பெருகி வரும் நாய்கள், பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆலங்குளம் மேற்குப் பகுதியில் வட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணைய வழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தென்காசி மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் நரசிம்மன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் குடிநீா் கோரி போராட்டம்

குடிநீா் வழங்கக் கோரி சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் ஊராட்சிக்குள்பட்ட பாரதி நகரில் 500-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஆலங்குளம் இளைஞா் கைது

ஆலங்குளத்தில் கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். ஆலங்குளம் ஜோதி நகா் பூல்பாண்டி மகன் இந்திரஜித் பிரேம்நாத் (30). இவா் ... மேலும் பார்க்க