செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!
தென்திருப்பேரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை
தென்திருப்பேரையில் உள்ள 15 வாா்டு பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளா்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
பேரூராட்சி தலைவா் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினாா். திமுக மத்திய ஒன்றிய செயலாளா் நவீன்குமாா் முன்னிலை வகித்தாா். தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகளை பேரூராட்சி தலைவா் வழங்கினாா், நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலாளா் முத்து வீரபெருமாள், நகர இளைஞரணி கருணாநிதி, கவுன்சிலா் ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.