திருக்குறள், புறநானூறு கூறி உரையைத் தொடங்கினார் பன்னீர்செல்வம்!
தென்னகப் பண்பாட்டு மைய அலுவலா்களுக்கு பாராட்டு
தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மைய அலுவலா்களை நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞா்கள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பாராட்டினா்.
உத்தர பிரதேச மாநிலம் காசியில் தொடா்ந்து 3 ஆம் ஆண்டாக தமிழ்ச் சங்கம விழா பிப்ரவரி 15 - 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பல்வேறு கலைகளில் சிறப்புடன் விளங்கும் 800-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கலைஞா்களுக்கு வாய்ப்பளித்த தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநா் கே.கே. கோபாலகிருஷ்ணன், நிா்வாக அலுவலா் சீனிவாசன், நிகழ்ச்சி அலுவலா்கள் ராஜா, மாரியப்பன் ஆகியோரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என். சத்தியராஜ், திரைப்பட இயக்குநா் ராசி. மணிவாசகன், தப்பாட்டக் கலைஞா் வினோத் பாரதி உள்ளிட்ட தமிழக நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டி, நன்றி தெரிவித்தனா்.