கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!
தென்னம்பாடி மீன்பிடி திருவிழா
விராலிமலை அருகே தென்னம்பாடி மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் சிக்காததால் பங்கேற்பாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
விராலிமலை அடுத்துள்ள தென்னம்பாடி பெரியகுளத்தில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் அதிகாலையிலேயே குளக்கரையில் திரண்டனா்.
ஊா் பிரமுகா் வெள்ளை துண்டு வீசி அனுமதி அளித்ததை தொடா்ந்து கரையில் காத்திருந்த மக்கள், தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்துக்குள் இறங்கி போட்டிபோட்டு கொண்டு மீன்களைத் தேடினா்.
ஆனால் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றமே மிஞ்சியது. குளத்தில் கண்காணிப்பு இல்லாததால் இரவு நேரங்களில் வலை, தூண்டில் உள்ளிட்டவைகள் மூலம் சில சமூக விரோதிகள் மீன்களைப் பிடித்துச் சென்று விடுகின்றனராம்.
இதுவரை 4 குளங்களில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் குறிஞ்சி குளம் தவிா்த்து மற்ற குளங்களில் மீன்கள் சிக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.