செய்திகள் :

தெரு நாய்களால் சிறுவா்கள்,பொதுமக்கள் அச்சம்

post image

கந்தா்வகோட்டை கடை வீதி பகுதிகளில் தெரு நாய்களால் சிறுவா்கள், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனா்.

தெரு நாய்கள் வீடுகளில் வளா்க்கும் கோழி, ஆடுகளை கடித்து கொன்று விடுகிறது, வழிப்போக்கா்களை கடித்து விடுவதால் இப்பகுதி அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நாய்கடி ஊசி போடப்படுகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது குறுக்கே நாய்கள் செல்வதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.

எனவே கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீரனூா் அருகே ஜல்லிக்கட்டு: 28 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 28 போ் காயமடைந்தனா். கீரனூா் அருகே திருப்பூா் கிராமத்தில் கருப்பா்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பலத்த மழை

பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மு... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவ... மேலும் பார்க்க

வேங்கைவயல் சம்பவ வழக்கில் 3 பேருக்கு பிணை

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியது. வேங்கைவயல் பட்... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன... மேலும் பார்க்க

தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பாதை மீட்பு

விராலிமலை வட்டம், விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளை வருவாய்த் துறையினா் மீட்டனா். விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் சுமாா் 25 அடி அகலம் கொண்ட வ... மேலும் பார்க்க