செய்திகள் :

தெலங்கானா சுரங்க விபத்து: மீட்புப் பணியில் இணைந்த புவியியல் நிபுணர்கள்!

post image

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 8 பேரை மீட்பதற்கான பணிகளை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான பரிந்துரையைத் தெரிவிக்க தெலங்கானா அரசு இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை நாடியுள்ளது.

சுரங்கத்தில் சிக்கியுள்ள 8 பேரை மீட்பதற்கானப் பணிகள் 4வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடவுள்ளதாக அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது பற்றி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “தற்போது, சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை, இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் வேறு சிலருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். தற்போது தண்ணீரை அகற்றிவிட்டு முன்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் கடைசி 40 மீ - 50 மீட்டர் வரை செல்லமுடியாத நிலையே உள்ளது.

நாங்கள் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். எல் அன்ட் டி(L&T) நிபுணர்களும் இங்கு வந்துள்ளனர்.

இதையும் படிக்க: கனடாவில் புதிய விசா விதிமுறைகள்! 4.2 லட்சம் இந்திய மாணவர்கள் நிலை?

இவர்களைத் தவிர சுரங்கப்பணிகளில் அதிகம் அனுபவம் வாய்ந்த எல் அன்ட் டி நிறுவனத்துடன் தொடர்புடைய ஆஸ்திரேலிய நிபுணர் ஒருவர் சுரங்கப்பாதையின் உறுதித்தன்மையை ஆராய்ச்சி செய்வதற்காக இணைந்துள்ளார்.” என்றார்.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். சுரங்கத்துக்குள் சேறு, தண்ணீா், இடிபாடுகள் சூழ்ந்திருப்பதால் அவா்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.

எனினும், மத்திய மற்றும் மாநில பேரிடா் மீட்புக் குழுக்களுடன் ராணுவம், கடற்படை, சிங்கரேணி காலியரிஸ் மற்றும் பிற நிறுவனங்களைச் சோ்ந்த 584 போ் கொண்ட மீட்புக் குழு தொடா் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

உத்தரகண்ட் சுரங்க விபத்தில் அனுபவமுள்ள ‘எலிவளை சுரங்க’ முறை தொழிலாளா்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

lசிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க