செய்திகள் :

தெலுங்கு திரையுலகில் யோகி பாபு! நடிகர் பிரம்மானந்தமுடன் கைகோக்கிறார்!

post image

நடிகர் யோகி பாபு, பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் புதிய திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகின்றார்.

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்து வெளியான “மண்டேலா” திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றது.

இந்நிலையில், இயக்குநர் முரளி மனோஹர் ரெட்டி மற்றும் நடிகர் பிரம்மானந்தம் கூட்டணியில், “குர்ராம் பாப்பி ரெட்டி” எனும் புதிய திரைப்படம் உருவாகி வருகின்றது.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன்மூலம், நடிகர் யோகி பாபு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகி வரும் இந்தப் படத்தில், தற்போது யோகி பாபுவும் இணைந்துள்ளது தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

சமீபத்தில், நடிகர் பிரம்மானந்தததின் அழைப்பின் பேரில் யோகி பாபு அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார். நீண்ட நேர உரையாடல்களுக்கு பின், யோகி பாபுவுக்கு, ”நான் பிரம்மானந்தம்” எனும் தனது புத்தகத்தை அவர் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

Actor Yogi Babu is making his Telugu debut with popular comedian Brahmanandam's new film.

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ஓடும் குதிர சாடும் குதிர படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மாரீசன் திரைப்படத்தைத் தொடர்ந்து ஃபஹத் ஃபாசில் நடித்து முடித்துள்ள படம் ஓடும் குதிர சாடும் குதிர. காதல்... மேலும் பார்க்க

மாநகரம் - கூலி உறங்கா இரவுகள்... கலை இயக்குநர் பற்றி லோகேஷ் பெருமிதம்!

கூலி திரைப்படத்தின் கலை இயக்குநர் குறித்து லோகேஷ் கனகராஜ் பெருமிதமாகப் பதிவிட்டுள்ளார். கூலி படத்தில் வேலை பார்த்த ஒரு கலைஞர் குறித்து லோகேஷ் தினமும் பதிவிட்டு வருகிறார்.இந்தப் படத்துக்கு கலை இயக்குநர... மேலும் பார்க்க

தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!

மாமன் திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்பப் பொழுதுபோக்கு திர... மேலும் பார்க்க

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ் வெற்றி

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவில் அா்ஜுன் எரிகைசி, வின்சென்ட் கீமா், விதித், பிரனேஷ் வெற்றி பெற்றனா். தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றாா். ஹயாட் ரீஜென்சி ஓட்டலில் நடைபெறும் இப்ப... மேலும் பார்க்க

தேசிய மகளிா் ஜூனியா் ஹாக்கி: அரையிறுதியில் ஹரியாணா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், உத்தரபிரதேசம்

தேசிய மகளிா் ஜூனியா் ஹாக்கிப் போட்டி அரையிறுதிக்கு ஹரியாணா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், உத்தரபிரதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடாவில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை காலிற... மேலும் பார்க்க

பஞ்சாப் எஃப்சியை வீழ்த்தியது போடோலாந்து

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போடோலாந்து அணி. 134-ஆவது டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க