செய்திகள் :

தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்த திட்டம்: டிரம்ப்

post image

எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அவசரநிலை பிரகடனம் செய்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதை டொனால்டு டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் சட்டவிரோத குடியேற்றம் குறித்த கருத்துகள் முக்கிய பிரச்னையாக இருந்தது. அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்தி, மெக்ஸிகோவுடனான எல்லையை உறுதிப்படுத்துவேன் என்று டொனால்டு டிரம்ப் உறுதி அளித்திருந்தார்.

இதையும் படிக்க : ஒரு மாதத்துக்குள் ஷேக் ஹசீனா வழக்கில் விசாரணை அறிக்கை

இந்த நிலையில், ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில், டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் தேசிய அவசரநிலை கொண்டு வரப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி பெருமளவிலான புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தவுள்ளார் என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவுக்கு பதிலளித்த டிரம்ப், உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

ட்ரூத் சோசியல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டிரம்ப் வெற்றி பெற்றார். வருகின்ற ஜனவரி மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.

டிரம்ப் அரசின் எல்லைப் பாதுகாப்புத் துறைக்கு தலைவராக முன்னாள் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் இயக்குநர் டாம் ஹோமனை நியமித்துள்ளார்.

இவர், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், “ஜோ பைடனால் விடுவிக்கப்பட்ட லட்சக்கணக்கான சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஒரு செய்தி உள்ளது. நீங்கள் தற்போதே பேக் செய்வது நல்லது” எனத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி மக்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி குடும்பங்களை பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீன இளைஞரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் படை!

பாலஸ்தினத்தின் மேற்கு கரையோரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேற்கு கரையின் நபுலஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் ரோந்து சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, துப்பா... மேலும் பார்க்க

தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: பெய்ரூட்டில் 10 பேர் பலி! 25 பேர் காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று (நவ. 19) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 25க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பார்க்க

வால்மார்ட் ஓவனில் இந்தியப் பெண் சடலம்: கொலை இல்லை என்கிறது கனடா காவல்துறை!

இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பெண், கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பேக்கரி அடுப்பில் சடலமாகக் கிடந்த வழக்கில், வேறு யாருக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கனடா ... மேலும் பார்க்க

இலங்கையின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு

கொழும்பு: இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசில், 21 உறுப்பினா்கள் அடங்கிய சிறிய அமைச்சரவை திங்கள்கிழமை பொறுப்பேற்றது.பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், வீண் செலவுகளைக் குறைக்கும் வகையில் ஆட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து வந்த கப்பல்...

கடந்த 1971-ஆம் ஆண்டில் பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் சுதந்திரம் பெற்ற்குப் பிறகு முதல்முறையாக அந்த நாட்டிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் நேரடியாக வங்கதேசம் வந்துள்ளது.சிட்டகாங் துறைமுகத்த... மேலும் பார்க்க

ஒரு மாதத்துக்குள் ஷேக் ஹசீனா வழக்கில் விசாரணை அறிக்கை

டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்ட... மேலும் பார்க்க