செய்திகள் :

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

post image

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் குழு வாரணாசிக்கு சென்றுள்ளது.

இந்நிகழ்ச்சியை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கி வைத்தார். இதில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தர்மேந்திர பிரதானிடம் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “தமிழகத்திற்கு வழங்கவேண்டிய கல்வி நிதி நிலுவையில் இருப்பது எனக்குத் தெரியும். தமிழக அரசு அரசியல் காரணத்திற்காக தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர்.

இதையும் படிக்க | 'முதல்வருக்குதான் டப்பிங் தேவை; எங்களுக்கு இல்லை' - அண்ணாமலை

உள்ளூர் மொழிக்கே முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறதா? உலகமே மாறி வரும் சூழலில் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏன் ஏற்க மறுக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையில் தமிழை படிக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. தமிழக அரசு மட்டும் இருமொழி கொள்கை என்று மக்களை குழப்புகிறது.

அதனை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ.2152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. தமிழக அரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும்” என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

தூக்கம் கெடுத்த சேவல் மீது வழக்கு! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

கேரளத்தில் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் நாள்தோறும் கூவிய சேவல் மீது முதியவர் ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட பல்லிகல் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிர... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் பதவியேற்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கவிருக்கிறது. இதற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.அதன்படி, தில்லி முதல்வர் பதவியேற்பு விழா, பிப்ரவரி 20ஆம் தேதி... மேலும் பார்க்க

ஐபிஎல் சூதாட்டம்: மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை!

கர்நாடக மாநிலம் மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த இரண்டு நாள்களில் தற்கொலை செய்துகொண்டனர்.ஐபிஎல் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்துக்காக வாங்கப்பட்ட கடனை திரும்ப அளிக்க முடியாத காரணத்தால் ... மேலும் பார்க்க

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகத்துக்கு பூஜ்யம்!

கடந்த 2024ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,554.99 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.தமிழகத்தில... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை!

புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை கோரிக்கை வைத்துள்ளது.அரசியல் சாசன அமர்வின் விசா... மேலும் பார்க்க

சரிவில் பங்குச் சந்தை! சுகாதாரம், பார்மா துறை பங்குகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று (பிப். 19) சரிவுடன் தொடங்கியது. காலை 9.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 290.97 புள்ளிகளும் நிஃப்டி 91.70 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் தொட... மேலும் பார்க்க