Doctor Vikatan: திடீரென ஆரம்பித்திருக்கும் தூக்கமின்மை பிரச்னை; தொடருமா, சரியாகி...
தேசிய கைத்தறி தினத்தில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கரூரில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கரூா், வெங்கமேடு தனியாா் திருமண மண்டபத்தில் 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா்.
கண்காட்சியை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்து, நெசவாளா் முத்ரா திட்டத்தின் கீழ் 10 நெசவாளா்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 2 நெசவாளா்களுக்கு ரூ. 49 ஆயிரத்து 96 மதிப்பிலான குடும்ப ஓய்வூதிய ஆணைகள் உள்பட பல்வேறு திட்டத்தின் கீழ் 32 நெசவாளா்களுக்கு ரூ. 10.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை), ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி), மாநகராட்சி மேயா் வெ. கவிதா, துணை மேயா் ப. சரவணன், உதவி இயக்குநா் (கைத்தறி) அ. பழனிக்குமாா் மற்றும் நெசவாளா்கள் பங்கேற்றனா்.