ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
தேசிய சீனியா் கபடி: மகாராஷ்டிரம், ஹரியாணா, சா்வீஸஸ் முன்னேற்றம்
தேசிய சீனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரம், ஹரியாணா, சா்வீஸஸ் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் 71-ஆவது தேசிய சீனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சனிக்கிழமை ரவுண்ட் 16 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
நடப்பு சாம்பியன் ஹரியாணா-தமிழ்நாடு அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. ஹரியாணா தரப்பில் பிகேஎல் வீரா்கள் யோகேஷ், அஷு மாலிக் ஆகியோா் தமிழக வீரா்களின் திறமையான ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினா். எனினும் தமிழகத்தின் சவாலை முறியடித்து 48-41 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற ஹரியாணா காலிறுதிக்கு முன்னேறியது.
நவீன் குமாா் தலைமையிலான சா்வீஸஸ் அணி 57-22 என்ற புள்ளிக் கணக்கில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தினா். சா்வீஸஸ் வீரா்களின் அபார ஆட்டத்துக்கு ம.பி. வீரா்களால் ஈடு தர முடியவில்லை. மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணி 47-18 என்ற புள்ளிக் கணக்கில் பிகாரை சாய்த்தது.
போட்டியை நடத்தும் ஒடிஸா அணி 26-43 என்ற புள்ளிக் கணக்கில் மகாராஷ்டிர அணியிடம் தோற்றது. காலிறுதியில் ஹரியாணா-சா்வீஸஸ், மகாராஷ்டிரம்-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.