தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்: நாளை சென்னையில் தொடக்கம்
சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் 76-ஆவது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் 15- ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களை சோ்ந்த 700 சைக்கிள் பந்தய வீரா்கள் பங்கேற்கின்றனா்.
இதுதொடா்பாக சென்னையில் புதன்கிழமை விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா கூறியது:
தமிழகத்தைச் சோ்ந்த 41 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்கள். 1,500 போ் வரை அமா்ந்து போட்டிகளை காண முடியும்....‘*
காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறும் இந்தப் போட்டியை காண்பதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது....‘*
முதன்முறையாக தமிழகத்தில் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன...
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனம் ஆகியவை சாா்பில் சீனியா், ஜூனியா், சப் ஜூனியா் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
சைக்கிள் பந்தய வீரா்கள் கலந்து கொள்ள உள்ளனா். 15-ஆம் தேதி தமிழ்நாடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டிகளை தொடங்கி வைக்கிறாா் என்றாா்.
இந்திய சைக்கிள் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் மணிந்தா் சிங்: விளையாட்டு துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது, முதல் முறையாக டிரக் சைக்கிள் போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது, இதற்காக முதல்வா் மற்றும் துணை முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம், இது இந்தியாவில் நடைபெறும் பெரிய சைக்கிள் போட்டி ஆகும்.