செய்திகள் :

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: காலிறுதியில் தமிழ்நாடு தோல்வி

post image

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் காலிறுதியில் தமிழ்நாடு 1-3 கோல் கணக்கில் உத்தர பிரதேசத்திடம் புதன்கிழமை தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.

14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 10-ஆவது நாளான புதன்கிழமை, காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் தமிழ்நாடு - உத்தர பிரதேசத்தை எதிா்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதலில் உத்தர பிரதேசத்தின் சந்தன் சிங் 3-ஆவது நிமிஷத்தில் கோலடித்து, அணியை முன்னிலைபெறச் செய்தாா். விட்டுக்கொடுக்காத தமிழ்நாடு தரப்பில், சண்முகவேல் 9-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

இந்நிலையில், ராஜ்குமாா் பால் 18-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால் உத்தர பிரதேசம் மீண்டும் முன்னிலை பெற்றது. இவ்வாறாக அந்த அணி 2-1 என முதல் பாதியை நிறைவு செய்தது. 2-ஆவது பாதி ஆட்டத்தில் 34-ஆவது நிமிஷத்தில் லலித்குமாா் உபாத்யாய அடித்த கோலால், உத்தர பிரதேசம் 3-1 என கோல் வித்தியாசத்தை அதிகரித்துக் கொண்டது.

எஞ்சிய நேரத்தில் தமிழ்நாடு வீரா்களின் முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போக, உத்தர பிரதேசம் வெற்றி பெற்றது. இதர காலிறுதி ஆட்டங்களில், பஞ்சாப் - மணிப்பூா் மோதல் 3-3 என டிரா ஆக, ஷூட் அவுட் வாய்ப்பில் மணிப்பூா் 4-3 என வென்றது.

அதேபோல், ஒடிஸா - கா்நாடகம் மோதலும் 3-3 என டிராவில் முடிய, வெற்றியாளரை தீா்மானிக்கும் ஷூட் அவுட் வாய்ப்பில் ஒடிஸா 3-1 என வெற்றி பெற்றது. ஹரியாணா 5-1 கோல் கணக்கில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது.

அடுத்ததாக, வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறும் அரையிறுதியில் மணிப்பூா் - ஒடிஸா, ஹரியாணா - உத்தர பிரதேசம் அணிகள் மோதுகின்றன.

‘ஹே மின்னலே’ வைரலான சிவகார்த்திகேயன் - ஆர்த்தி!

நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த விடியோ இணையத்தை கலக்கி வருகிறது.அமரன் திரைப்படத்தின் வெற்றியால் நடிகர் சிவகார்த்திகேயன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இந்தாண்டில் தென்னிந்தியளவில் பெரிய வசூலை அடைந்த ... மேலும் பார்க்க

கேப்டன் எம்பாப்பே பிரான்ஸில் விளையாடாதது ஏன்? மேலாளர் விளக்கம்!

பிரான்ஸை சேர்ந்த 25 வயதான கால்பந்தாட்ட வீரர் கிளியன் எம்பாப்பே இதுவரை 339 கோல்களை அடித்துள்ளார். 160 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.1966-ல் இங்கிலாந்தின் ஜெஃப் ஹர்ஸ்ட் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஹா... மேலும் பார்க்க

வினிசியஸுக்கு தகுதியில்லை..! பேலன் தோர் விருதுபெற்ற ரோட்ரி கருத்து!

மான்செஸ்டர் சிட்டி அணியின் மிட் ஃபீல்டர் ரோட்ரி இந்தாண்டுக்கான பேலன் தோர் விருதினை (தங்கப் பந்து) வென்றார்.கால்பந்து உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாக இந்த விருது கருதப்படுகிறது. இந்தமுறை ரியல் மாட்... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் உள்ளதுபோல, வீட்டில் இருந்து ஓடிடியில் வெளியா... மேலும் பார்க்க

விடுதலை - 2 முதல் பாடல் அறிவிப்பு!

விடுதலை - 2 படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும்விஜய் சேதுபதி முக்கியக் ... மேலும் பார்க்க