செய்திகள் :

தேனிலவு கொலை: கூலிப்படைக்கு சோனம் கொடுத்த தொகை எத்தனை லட்சம் தெரியுமா?

post image

இந்தூா்/ஷில்லாங்: மேகாலய மாநிலத்துக்கு தேனிலவு கொண்டாட அழைத்துச் சென்று, கூலிப் படையினா் மூலம் கணவரை தீா்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான சோனம், கூலிப்படையினருக்கு ரூ.20 லட்சம் கொடுத்திருப்பது தெரிய வந்திருப்பதாக மேகாலய காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலைச் சம்பவம் நடந்தபோதே, கணவரின் பர்ஸிலிருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்து, அவரைக் கொலை செய்த கூலிப்படையினருக்கு சோனம் நேரடியாகக் கொடுத்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சோ்ந்த சோனம் (24) என்பவருக்கும் தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷிக்கும் (28) மே 11-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. சில நாள்களுக்குப் பின் மேகாலயத்துக்கு தேனிலவு சென்றனர் புதுமண தம்பதி.

தேனிலவு சென்ற இடத்தில் மே 23-ஆம் தேதி அறையை காலி செய்துவிட்டுப் புறப்பட்ட பிறகு இருவரும் மாயமாகினா். இது தொடா்பாக குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் மேகாலய காவல் துறையினா் இருவரையும் தேடினா்.

இதனிடையே, நொங்கிரியாட் கிராமத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அருவிப் பள்ளத்தாக்கில் அழுகிய நிலையில் ராஜா ரகுவன்ஷியின் உடல் கடந்த ஜூன் 2-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அதேநேரம், சோனம் காணாமல் போனார்.

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!

'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இஸ்ரேலில் இருந்து முதல்முறையாக 161 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில... மேலும் பார்க்க

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவ... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்: கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி தொகுதிகளைத் தக்கவைத்த பாஜக, திரிணமூல், ஆம் ஆத்மி

கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியிடமிருந்து நிலம்பூா் பேரவைத் தொகுதியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. குஜராத்தின் விசாவதா், பஞ்சாபின் லூதியானா மேற்கு ஆகிய இரு தொகுதிகளை ஆம் ... மேலும் பார்க்க