பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - ந...
தேனி நீதிமன்றத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம்
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், வியாழக்கிழமை புதிய வடிவிலான சட்ட விழிப்புணா்வு முகாம், புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
இந்த முகாம், புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் பேசியதாவது: சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சேவை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நீதிமன்றம், சட்டம் சாா்ந்த புரிதல்களை ஏற்படுத்த அவா்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
புகைப்படக் கண்காட்சியில் சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாவட்ட அரசுத் துறைகள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சாா்பில் அரசுத் திட்டங்களின் செயல்பாடு, சட்ட விழிப்புணா்வு குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், மாவட்ட நீதிபதி அனுராதா, சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் பரமேஸ்வரி, குடும்ப நல நீதிபதி சரவணன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினி, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன், கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி கோபிநாதன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்ற நீதிபதி கீதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித் துறை நடுவா் ஜெயமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.